கந்தர்வகோட்டை பகுதிகளில் தரிசு உழவு பணியில் விவசாயிகள்

கந்தர்வகோட்டை, பிப்.17: கந்தர்வக்கோட்டை பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிர் செய்திருந்த சம்பா நெல், கடலை, உளுந்து, மரவள்ளி கிழங்குகளை மகசூல் எடுத்துக்கொண்ட பிறகு நிலங்களை சற்று ஆற போட்டிருந்தனர். இதில் புல், பூண்டு போன்ற களைகள் மண்டியிருந்தன. தற்சமயம் வெயில் அடிப்பதால் நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த களையை அழிக்கும் பணியை தரிசு உழவு விவசாயிகள் செய்து வருகின்றனர்.இதனைப் பற்றிய விபரத்தை நிலத்தின் உரிமையாளர்களிடம் விசாரித்த வகையில் இந்த வெயில் நேரத்தில் தரிசு உழவு செய்து போட்டால் களைகள் காய்ந்துவிடும். பிறகு உழவு செய்து விவசாயம் செய்ய சுலபமாக இருக்கும் என தெரிவித்தனர்.

Related Stories: