முன்னாள் திட்ட துறை இயக்குனர் தகவல் சீர்காழியில் தந்தை பெரியார் தி.க., திமுக கூட்டணிக்கு ஆதரவு

சீர்காழி, பிப்.10: சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மயிலாடுதுறை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பரசுராமன் தலைமை வகித்தார். சீர்காழி நகர செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். மாணவர் அணி பொறுப்பாளர்கள் தருண், ராகுல் மதன்,அருண், சூர்யா, ராஜ்,பாரதி முன்னிலை வகித்தனர். கொள்ளிட ஒன்றிய தலைவர் நந்தராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ். தந்தை பெரியார் தி.க. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: