உழவர் நாரயணசாமி பிறந்த நாள் விழா

கோவை: உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடுவின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு, கோவை மாவட்ட வருவாய் அலுவலர், லீலா அலெக்ஸ் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் போராட்ட முறைகளை செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவரான தலைவராக  நாராயணசாமி நாயுடு உள்ளார். தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1973-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி துவங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான விருது: கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சிவப்ரீத்தம்.  கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்களில் நடித்து வருகிறார். ரோபோட்டிக் துறை சார்ந்த மாணவரான சிவப்ரீத்தம் நடிப்பு துறையிலும் ஈடுபட்டுள்ளதை பாராட்டி அவருக்கு ஐகே 7 சர்வதேச சாதனை புத்தகம் சிறந்த நடிகருக்கான விருதை கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.

Related Stories: