மதுரை புதூரில் லூர்தன்னை திருத்தல பெருவிழா கொடியேற்றம்

மதுரை, பிப். 5: மதுரை  கோ.புதூர் லூர்தன்னை திருத்தலத்தின் 102வது ஆண்டு பெருவிழா நேற்றிரவு  கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி சலேசிய மாநிலத்தின் மாநில உதவி  தலைவர் அருள்மாறன் தலைமை வகித்து பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.  பங்குதந்தை தாஸ்கென்னடி, உதவி பங்கு தந்தை டேவிட், தந்தையர்கள் ஜெரால்டு,  பிரபு முன்னிலை வகித்தனர். குடும்பம் நம்பிக்கைளின் அடித்தளம் என்ற  தலைப்பில் மறையுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை,  மாலையில் ஜெபமாலை, திருப்பலிகள் நடைபெறும்.

பங்கு தந்தை ஜான்கென்னடி  தலைமையில் நற்கருணை பவனி நடைபெறும். பிப்.12 அன்று மதுரை உயர் மறை மாவட்ட  பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு  அன்னையின் தேர் பவனி நடைபெறும்.

திருவிழாவின் கடைசி நாளான பிப்.13 அன்று  பொங்கல் விழா திருப்பலிகள் நிறைவேற்றப்படும்.

Related Stories: