வெள்ளகோவிலில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம்

திருப்பூர்: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வெள்ளகோவிலில் முத்தூர் ரோடு, பஸ் நிலையம் எதிரில் உள்ள அலுவலகத்தில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை )  வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

முகாமில் சிறப்புச் சலுகையாக 0.50 சதவீதம் நிர்வாகக் கட்டணம் மற்றும் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் பிரதம மந்திரியின் ஆவாஷ்யோஜனா, ரெப்கோ ரூரல், ரெப்கோஹோமின் இதர திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு முகாமில் டிடிசிபி அப்ரூவல் பெற்ற வீட்டு மனை வாங்க, வீடு கட்ட, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்க, வீடு பழுது பார்க்க மற்றும் விஸ்தரிக்க, வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டிடங்கள் கட்ட, நிலுவையில் உள்ள அதிக வட்டி வீட்டு வசதி கடனை மாற்றிக்கொண்டு கூடுதல் தொகையைப்  பெறவும், கடனுக்கான முன் அனுமதி கடிதம் உடனுக்குடன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் எஸ்.கார்த்திகேயன், துணை மேலாளர் ஆர்.பாலகுமார் மற்றும் வங்கி அதிகாரிகள்  செய்துள்ளனர்.மேலும் விவரங்களுக்கு 8949942884 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: