முன்னாள் படைவீரர் ‘சார்ந்தோர் சான்று’ இணையத்தில் பதிவு செய்து வழங்கப்படும்

 

கோவை, மே 18: முன்னாள் படைவீரர் சார்ந்தோர் சான்று இணையத்தில் பதிவு செய்து வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முன்னாள் படைவீரர்களுக்கு கடந்த கல்வி ஆண்டைபோல நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி சேர்க்கைக்கான ‘சார்ந்தோர் சான்று’ இணையதளத்தில் பதிவு செய்து வழங்கப்படவுள்ளது. இந்த சான்று வழங்கிட முன்னாள் படைவீரர் அடையாள அட்டை விபரங்களை https://esmwel.tn.gov.in என்ற முகவரியில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றத்திற்குப் பிறகு சான்றிதழ் கோருபவர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, மாணவர்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்று, சாதிச்சான்று நகல், கல்வி நிறுவன விண்ணப்பத்தின் நகல், பார்ட் டு ஆர்டர், முன்னாள் படைவீரர்/விதவைகள் பென்சன் புத்தகம், வங்கிக் கணக்கு மற்றும் ரேசன் கார்டு போன்ற ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். 2024-25ம் கல்லி ஆண்டிற்கு முந்தைய கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை பயன்படுத்தக்கூடாது.

புதிதாக பெறப்பட்ட சார்ந்தோர் சான்று மட்டுமே கல்வி நிறுவன பல்கலைக்கழக விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டும். மேலும் ஒரு படிப்புக்காக (Course) பெறப்படும் சார்ந்தோர் சான்று அந்த படிப்புக்கு மட்டுமே பொருந்தும். இந்த சான்று மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே சார்ந்தோர் சான்று பெறவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முன்னாள் படைவீரர் ‘சார்ந்தோர் சான்று’ இணையத்தில் பதிவு செய்து வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: