மாநகராட்சி சொத்து மீட்பு விவகாரம் குறித்து விளக்கம்

கோவை, மே 16: கோவை பூமார்க்கெட் பாபா காம்ப்ளக்ஸ் உரிமையாளர் பாபா பாலசுப்பிரமணியம் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை புரூக்பான்ட் ரோடு கிருஷ்ணசாமி நகரில் எங்களுக்கு சொந்தமான 20 சென்ட் இடம் உள்ளது. இது, கடந்த 2005-ம் ஆண்டு எங்கள் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, இந்த இடத்தில் சிட்கோ நிறுவனம் வாடகைக்கு இயங்கி வந்தது. அந்நிறுவனத்தினர் காலி செய்தபின்னர், எங்கள் பெயருக்கு பத்திரம் செய்யப்பட்டது. இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் திட்டச்சாலை அமைக்க, நாங்கள் மாற்று இடம் கொடுத்த பிறகு, அந்த சொத்துக்களை நாங்கள் வாங்கி அனுபவித்து வந்தோம்.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு, விடுமுறை நாளில் சொத்தின் உரிமையாளர்களுக்கு எவ்வித தகவலும் அளிக்காமல், நோட்டீஸ் வழங்காமல், திடீரென ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி, சொத்துக்களை நாசப்படுத்தி மீட்டெடுத்தது. இது, தனி மனித சொத்து பாதுகாப்பு சட்டம் 300ஏ-வின் படி குற்றம் ஆகும். 54 வருடம் கழித்து இப்படி திடீரென சொத்தை நாசப்படுத்தி, மீட்டெடுத்த செயல் வருத்தம் அளிக்கிறது. இதை, நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாநகராட்சி சொத்து மீட்பு விவகாரம் குறித்து விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: