பொன்பரப்பி, செந்துறை அரசு பள்ளியில் உலக ஈரநிலங்கள் தின விழிப்புணர்வு

செந்துறை,பிப்.3: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு கேள்வி பதில்கள் கேட்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முதுகலை விலங்கியல் ஆசிரியர் பஞ்சாபகேசன் பேசுகையில், ஈரநிலம் என்பது சுற்றுச்சூழலையும் அதனுடன் தொடர்புடைய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் பாதுகாக்கும் முதன்மையான காரணியாக உள்ளது. சதுப்பு நிலங்கள், ஆறுகள், ஏரிகள், டெல்டாக்கள், வெள்ளம் சூழ்ந்த காடுகள், நெற்களஞ்சியங்கள் ஈரநிலங்கள் தொகுப்பில் அடங்குகிறது. அதிக மாசு, தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுதல், காடுகள் அழிப்பு மற்றும் வாழ்விட அழிவு, வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக ஈர நிலங்கள் அளவு குறைந்து வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் வாழ்விடங்கள் குறைந்து வருகிறது, சுற்று சூழலை காக்க இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார். இதேபோல் செந்துறை அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளியிலும் தலைமையாசிரியை ஆதிரை முன்னிலையில் உலக ஈர நில தினம் பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டது.

Related Stories: