ஜாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த கிராம மக்கள்

நாமக்கல்: வளையப்பட்டியை அடுத்துள்ள ரெட்டையாம்பட்டியில் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாய கூலித்தொழிலாளர்கள். இவர்கள் ரெட்டி கஞ்சம் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் கேட்டு, பல ஆண்டாக மனு அளித்து வருகிறார்கள்.

ஆனால் வருவாய்த்துறையினர் சான்றிதழ் கொடுக்க மறுத்து வருகிறார்கள். இதனால் தங்களது குழந்தைகள் மேற்படிப்பிற்கு செல்ல முடியவில்லை. அரசு வழங்கும் சலுகைகள் பெற முடியவில்லை. இதையடுத்து நேற்று அப்பகுதி மக்கள், தங்களது குழந்தைகளுடன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாய முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் வந்தனர்.

தொட்டில் கட்டி அதில் கோரிக்கை மனுக்களை வைத்து கலெக்டரை சந்தித்க்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனு அளிக்கும் போராட்டத்தில், விவசாய முன்னேற்ற கழக தலைமை நிலைய செயலாளர் மாதேஷ்வரன், நிர்வாகிகள் தண்டபாணி, சுப்பிரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: