டூல்ஸ் கடையில் தீ

சேலம்: சேலம் சாரதா கல்லூரி சாலையில், பல்வேறு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் பவர்டூல்ஸ் கடை உள்ளது. இக்கடையை நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். இரவு 11 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வந்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகியது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: