பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தும் பணி தீவிரம்

பெரம்பலூர், ஜன. 28: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், நுழைவு வாயில்களை மூட பெரம்பலூர் நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழக அளவில் ஊரக உள் ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலை யில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலுடன் இன்று(28ம் தேதி) தொடங்குகிறது. தேர்தல் ஆணையம் இதற் கான அறிவிப்பை வெளியிட்ட நாள் (26ம்தேதி) முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிற, பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தைவிதிகளை அமல்படுத்த நகராட்சி ஆணையர் மற்றும் பேரூராட் சி செயல்அலுவலர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதன்படி நேற்றிரவு (27ம் தேதி) பெரம்பலூர் பாலக்கரையிலுள்ள கலெக்டர்அலுவலக நுழைவு வாயிலில் உள்ள முன்னால் முதல்வர் ஜெயலலிதா பெயர் நகராட்சி ஊழியர்களால் துணிகள் வைத்து மூடப்பட்டது. மேம்பால சுவர்களில் அரசு கட்டிட சுவர்களில் ஒட்டப்பட் டிருந்த அரசியல் கட்சிப் போஸ்டர்களை கிழித்து அகற் றும் பணிகளும் தொடங்கியுள்ளது. சிலைகளை மூடவு ம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: