வாலிபரை குத்திய 2 பேர் கைது

சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(24). இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த நந்தகோபால்(34), கார்த்திக்(29) ஆகியோர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டதால் நந்தகோபாலும், கார்த்திக்கும் சேர்ந்து, கத்திரிகோலால் தாமரைச்செல்வனை குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார், இருவரையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.

Related Stories: