பாதுகாப்பின்றி நிற்கும் பறிமுதல் வாகனங்கள்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் போலீசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பின்றி நிற்கின்றன. ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் அளவுக்கு அதிகமாக தேங்கிக் கிடப்பதால் பாதுகாப்பதில் போலீசார் சிரமப்படுகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இடம் இல்லாத காரணத்தினால் திருடு போகும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில பெருமளவிற்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக டிராக்டர்கள் மற்றும் வண்டிகளை பறிமுதல் செய்து பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைத்துள்ளனர். மேலும் இந்த வாகனங்கள் பாதுகாப்பு இன்றி திருடு போகும் அபாயம் உள்ளது. இவ்வழக்குகளை உடன டியாக முடித்து வைத்து தீர்வு காண வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: