பட்டாசு தொழிலை காப்பாற்ற கோரிக்கை

சிவகாசி: சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். விருதுநகர் மாவட்ட பாஜக செய்தி தொடர்பாளர் ஆறுமுகம், பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சிவகாசியில் பட்டாசு தொழில் கடந்த 2 வருடங்களாக கோர்ட் உத்தரவின் காரணமாக முழுமையாக செயல்படவில்லை. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது, சரவெடி பின்னகூடாது என கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பட்டாசு உற்பத்தி சார்ந்த அச்சு தொழில், காகிதம் விற்பனை போன்ற உபதொழில்களும் பாதிப்படைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் பேரியம் நைட்ரேட் உபயோகம் செய்யப்படுகிறது. சங்கு சக்கரம், புஸ்வானம், வண்ணகலர் வெடி என அனைத்துவித பட்டாசுக்கும் பேரியம் நைட்ரேட் மூலப்பொருள் அவசியம்.

எனவே பட்டாசு தொழில் ெதாடர்ந்து செயல்பட உடனடியாக மாசுகட்டுப்பாடு வாரியம் மூலம் பேரியம் நைட்ரேட் உபயோகிக்கலாம் என்றும், 1000 வெடிகள் வரையிலான சரவெடி தயாரிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்ைட அணுகி அனுமதி வாங்கி தர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: