ேபரணாம்பட்டு அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல்

பேரணாம்பட்டு, ஜன.26: பேரணாம்பட்டு அரவட்லா மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக வேலூர் மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மேற்பார்வையில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, எஸ்ஐ தேவபிரசாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு அரவட்லா மலையில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பகுதிகளில் பேரல்களில் விற்பனைக்காக வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். முன்னதாக, போலீசார் வருவதையறிந்து சாராயம் காய்ச்சி விற்ற மர்ம ஆசாமிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: