இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள் மனு

சேலம்:சேலம் குகை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மக்கள், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு ஒன்ைற அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘குகை பகுதியில் 150க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். சிறுக, சிறுக சேமித்து, சிறிய அளவிலான வீடுகளை கட்டியுள்ளோம். அதற்கு பட்டா வழங்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். கடந்த 2010ம் ஆண்டு பட்டா வழங்க மாநகராட்சி கூட்டத்திலும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், எங்களது குடியிருப்புகள் நீர்பிடிப்பு பகுதி அல்ல என சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், அப்பகுதியில் பட்டா வழங்க முடியாத சூழல் ஏற்பட்டால், சேலம் மாநகரை ஒட்டியுள்ள மாற்று இடத்தில் பட்டா வழங்கி, இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: