போக்சோவில் மெக்கானிக் கைது

சிவகாசி, ஜன. 22: சிவகாசியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரது பெற்றோர், திருத்தங்கல் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். சோதனையில் மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது, அதே ஊரைச் சேர்ந்த மெக்கானிக் சங்கிலி கருப்பசாமி (31) மாணவியிடம் தகாத உறவு கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும், இவர் 5 மாதத்திற்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. சங்கிலிகருப்பசாமியை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories: