ஆதரவற்ற குடும்பத்துக்கு குவியும் உதவி

ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மந்தை தெருவைச் சேர்ந்தவர் குருபாக்கியம். இவருக்கு 8 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். குருபாக்கியத்திற்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது கணவர் அவரை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், இந்த குடும்பம் ஒரு வேலை உணவிற்கே வழியின்றி தவித்து வந்தது. மனநலம் மற்றும் உடல் பாதித்த குருபாக்கியத்தை அவரது மகள் பார்த்துக்கொள்ள, அவரது மகன் கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இது குறித்து தகவல் அறிந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் கலெக்டர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.  இந்நிலையில், சிவகாசி வெல்ஃபர் டிரஸ்ட் லயன்ஸ் கிளப் ஆஃப் கிங்க்ஸ் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து, அந்த குடும்பத்தின் ஒரு வருடத்திற்கான வீட்டு வாடகையை வழங்கிய அவர்கள், கூடுதலாக ரூ.6000 நிதியாக வழங்கினர். மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவாக உறுதி அளித்தனர்.

Related Stories: