குடிமைப்பணிக்கு இலவச பயிற்சி

மதுரை, ஜன. 22: இந்திய குடிமைப்பணி தேசிய மற்றும் மாநில தேர்விற்கான (யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி) பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் அனீஷ்சேகர் தகவல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவ, மாணவிகள் (யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கு அலங்காநல்லூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இந்நிறுவனம் நடத்தும் இப்பயிற்சியில் சேர 100 மாணவ, மாணவியர் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பப் படிவத்தினை https://bit.ly/Ready_Application_2022 என்ற கூகுள் இணைப்பிலும் அல்லது QR-கோடினை ஸ்கேன் செய்தும் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான மேலும், விபரங்களுக்கு 99767 45854 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.  அல்லது CSE என்று டைப் செய்து வாட்ஸ் அப் அனுப்புவதன் மூலம் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: