ரூ.2.40 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்

ஓமலூர்: ஓமலூர் காமராஜர் பூங்காவை மேம்பாடு செய்ய ₹25 லட்சம், 10வது வார்டில் உள்ள பங்களா தோப்பு, பழைய 11வது வார்டு ஜெயா தியேட்டர் ஆகிய பகுதியில் சாலை அமைக்க ₹80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இப்பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் ஓமலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், பேரூர் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, தளபதி நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் சம்பு சண்முகம், அழகிரி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் லியாகத்அலி, வேடப்பட்டி காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் குப்புசாமி, பிரகாஷ், புஷ்பா, சசிகலா, அன்பழகன், மீரான், ஜாகீர், குட்டிமகேந்திரன், சின்னப்பன், மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சீனிவாசன், இளைஞரணி அமைப்பாளர் யூசூப்கான், காங்கிரஸ் கணேசன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதேபோல், காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள நாச்சினம்பட்டி மற்றும் காடையாம்பட்டி லட்சுமி நகரில் ₹1.40 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை ராஜேந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன், பேரூர் செயலாளர் திருநாவுக்கரசு, காடையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன், திமுக அவைதலைவர் முத்து, பொருளாளர் அய்யனார், நிர்வாகிகள் வெங்கட்டராமன், ராமநாதன், முருகன், தூயவன், சிவக்குமார், அண்ணாதுரை, பிரபாகரன், சௌந்தரராஜன், காளியப்பன், தங்கம், காமாட்சி சேகர், ராஜேந்திரன், சக்திவேல், மாரியப்பன், சுரேஷ், ஹரிஷ் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: