விசைத்தறி தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி

குமாரபாளையம்: விசைத்தறி தொழிலாளர்களுக்கான 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இன்று மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கான 3ம் சுற்று பேச்சுவார்த்தை தாசில்தார் தமிழரசி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. சமூக நலத்துறை தாசில்தார் சிவகுமார், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சங்கமேஸ்வரன், பூபதி, ஏஐசிசிடியூ தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, கதிரவன், சிஐடியூ நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, எம்எல் கம்யூனிஸ்ட் கோவிந்தராஜ், சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்கத்தினர் சட்டப்படியான போனஸ் தொகையான 8.33 சதம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் 8 சதம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து இன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு 4வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: