பெரம்பலூரில் இலவச மின் இணைப்புக்கான நேர் காணல்

பெரம்பலூர், ஜன.11: பெரம்பலூரில் நடந்த இலவச மின் இணைப்புக்கான நேர்காணலில் 111 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டு-4 ரோடு இடையே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் தலைமை வகித்தார். உதவி உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தின்கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக, 2003ம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதிவு செய்துள்ளவர்களுக்கு தயார்நிலை பதிவுக் கடிதம் அனுப்பப்பட்ட விவசாயிகளுக்கான நேர்காணலை நடத்தினர். இதில் 89 விவசாயிகளுக்கு பெயர் மாற்றம், 19 விவசாயிகளுக்கு புல எண் மாற்றம், 3 விவசாயிகளுக்கு புல எண் பெயர் மாற்றம், என மொத்தம் 111 மனுக்களுக்கு முகாமில் தீர்வு காணப்பட்டது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க படாததால் 5 மனுக்கள் திருப்பி அனுப் பப்பட்டது.

Related Stories: