அரியலூர் மாவட்டத்தில் 18வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

அரியலூர்,ஜன.9: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17வது கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 38 ஆயிரத்து, 231 பேர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 30 ஆயிரத்து756 பேர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18வது கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 254 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்கு உட்பட்ட 13 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 69 இடங்களிலும் என மொத்தம் 343 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தடுப்பூசி முகாம்களில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளதா என கேட்டறிந்து, முன்களப்பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஊராட்சிகளில் அனைத்து பகுதிகளிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, அறிவுறுத்தினார்.

Related Stories: