அரசு மருத்துவமனையில் குப்பைகளை தரம்பிரித்து அகற்றுவதில் சுணக்கம்

ஊட்டி, ஜன. 3: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை புரிகிறார்கள். பலர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவ்வாறு தங்கும் உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை மூலம் உணவு வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் தினந்தோறும் சேகரமாகும் உணவு கழிவுகள், இதர மக்கும், மக்காத கழிவுகள் ஊட்டி நகராட்சி மூலம் நாள்தோறும் அகற்றப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தனித்தனி தொட்டிகளில் போடுமாறு நோயாளிகளிடம் அறிவுறுத்துவதில்லை. இதனால் உள்ேநாயாளிகளாக தங்கி இருப்பவர்கள் குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போடாமல் அனைத்து குப்பைகளையும் ஒரே தொட்டியில் கொட்டி விடுவதாக கூறப்படுகிறது. ஊட்டி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக உணவு கழிவுகளுடன், பிளாஸ்டிக், பேப்பர் போன்ற குப்பைகளும், மருத்துவ கழிவுகளான பயன்படுத்தப்பட்ட முக கவசம், கையுறை, பஞ்சுகள், துணி, சிரிஞ்சிகள் போன்றவையும் சேர்த்து குப்பையுடன் வழங்கப்படுவதாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இ

துகுறித்து மருத்துவமனையில் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அனைத்து குப்பைகளும் சேர்ந்து வருவதால் தரம் பிரிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், மருத்துவ கழிவுகளால் தங்களுக்கு ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது என தூய்மை பணியாளர்கள் புலம்புகின்றனர். எனவே மக்கும், மக்காத குப்பைகள் தனியாக பிரித்து தருவதுடன், மருத்துவ கழிவுகள் கலக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: