புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திமுக செயல்வீரர் கூட்டத்தில் முடிவு

அந்தியூர், ஜன. 3: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் காளிமுத்து தலைமையில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் நடந்தது. இதில் அந்தியூர் ஒன்றிய செயலாளரரும், எம்எல்ஏவுமான ஏ.ஜி. வெங்கடாசலம் சிறப்புரையாற்றினர். இதில் வரும் காலங்களில் நடக்கும் பேரூராட்சி தேர்தலில் திமுக 100 சதவீத வெற்றியை பெறுவது குறித்தும், தேர்தல் வெற்றிக்கு திமுக கட்சியினர் ஒவ்வொரு பகுதி மக்களின் குறைகள், தேவைகளை தெரிந்துகொள்ளவேண்டும். அது குறித்து உரியவர்களை அணுகி நிறைவேற்றிட வழிவகை செய்ய வேண்டும். மேலும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய பாடுபட வேண்டும்.

மேலும் திமுக கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டது.  இதில் பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் பழனிசாமி, பொருளாளர் வக்கீல் மயிலேறு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள், சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் செபஸ்தியான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட அந்தியூர் ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: