ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச் போட்டி கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் தகவல்

கோவில்பட்டி, ஜன.1: கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குப்பைகளை பிரித்து சேகரித்தல், மட்கக்கூடிய குப்பைகளை உரமாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நிலைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச் என்ற போட்டி நடத்தப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் குறைந்த செலவில் கழிவு மேலாண்மை பணிகளை சிறப்புற தொழில் நுட்ப உதவியுடன் மேற்கொள்வது ஆகும்.

எனவே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் மறு சுழற்சி தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் திட்டங்களை கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 6ம்தேதிக்குள் அனுப்பலாம். நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை மாநில அளவில் அனுப்பப்படுவதுடன் அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைகள், கருத்துகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: