கோட்டூர் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மன்னார்குடி, டிச. 31: கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள கண்டகிரயம் எக்கல், வாழ்வோடு, மேலமருதூர், தட்டான்கோவில் ஆகிய பகுதிகளில் நடந்த இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு பிரசாரக் கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் பொது மக்கள் தன்னார்வலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரக் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே கலைக் குழுவினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோட்டூர் ஒன்றியத்தில் கண்டகிரயம் எக்கல் அரசுத் தொடக்கப்பள்ளியில் ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி குணசேகரன் தலைமையில் நேற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊராட்சி துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டகிரயம் எக்கல் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தங்க பாபு கலந்து கொண்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்து பேசி னார். இதில் தனலெட்சுமி தலைமையிலான கலைக் குழுவினர் தப்பாட்டம், ஒயிலா ட்டம் ,கரகாட்டம், நாடகம் மற்றும் பாடல்கள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தினர். கலைநிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் நூலகர் பிரேமா, ஏகாம்பரம், சந்திரா, சரண்யா அங்கன் வாடி பணியாளர்கள் சுகந்தி, வேல்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: