நரிக்குடி ஒன்றியத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

காரியாபட்டி, டிச. 23: நரிக்குடி அருகே இலுப்பையூர் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு  திறந்து வைத்தார்.நரிக்குடி அருகே இலுப்பையூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை  ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமிபெருமாள் தலைமையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், ‘‘தமிழகத்தில் மக்களுக்காக அடிப்படை வசதிகளை செய்து தருவதில் முதன்மையான முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். ஏழை எளிய மக்களை காக்கும் இயக்கமாக திமுக என்றும் இருக்கும், திருச்சுழி தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஒரு தொழிற்சாலை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் பிடிஓ திருநாவுக்கரசி, முருகன், ஒன்றிய செயலாளர்கள் போஸ்தேவர், கண்ணன்,  மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி,  ஒன்றிய கவுன்சிலர்கள் குமராயிசந்திரன் சிவசுப்பிரமணி, இசலி ரமேஷ், ஜெயராஜ், செல்லப்பா, ஊராட்சி செயலாளர் சிவராம்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: