மஞ்சுவிரட்டு விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் வடமாடு மஞ்சுவிரட்டு சங்கத்தினர் கோரிக்கை

மேலூர், டிச. 20: மேலூரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு சங்க கூட்டத்தில், கிராமங்களில் நடக்கும் பாரம்பரிய மஞ்சுவிரட்டுகளை நடத்த அரசு விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜல்லிகட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் தலைமை வகித்தார். வடமாடு சங்க கவுரவ தலைவர் பிகேஎம் செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது பி.ராஜசேகரன் பேசியதாவது : வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவதின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த உரிய அனுமதியை அரசு வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் நடத்தப்படும் பாரம்பரிய மஞ்சுவிரட்டுகளை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி எளிமைப்படுத்த வேண்டும், என சங்க தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மறைந்த பெயர் பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: