சின்னமனூர், டிச. 8: சின்னமனூரைச் சேர்ந்தவர் வாலிபர் வேல்முருகன். இவர், நேற்று முன்தினம் டூவீலரில் உத்தமபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பம் பழைய சோதனைச்சாவடி தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிரவீன் (20) என்பவர், சின்னமனூரில் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மறுபடியும் டூவீலரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சின்னமனூர் பழைய பாளையம் பிரிவு அருகே, வேல்முருகன் சிக்னல் போடாமல் வலதுபுறமாக திரும்பியதாக கூறப்படுகிறது.
