மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 15:  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் புனிதா தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புனிதா கூறுகையில், ‘‘தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தற்போது ரூ.1000ல் இருந்து ரூ.1,500 ஆக வழங்கப்படுகிறது.

ஆனால், பாண்டிச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,500 மாத உதவித்தொகையும், ஆந்திராவில் ரூ.3,200 மாதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகை உயர்த்தி வழங்கூட வேண்டும்’’ என்றார். கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: