ராமநாதபுரம், டிச.14: எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனில் மதுரை வாலிபர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த போலீசார் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன்(26). திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012 அக்.2ல் எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு,போலீசார் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எஸ்எஸ்ஐ முனியசாமி உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணி ஓய்வு பெற்ற முனியசாமி, கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
