மணமேல்குடி அருகே இறால் பண்ணை தொழிலாளி விஷம் தின்று தற்கொலை

அறந்தாங்கி, டிச.11: மணமேல்குடி அருகே இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபர் உடல் நலக்குறைவு காரணமாக விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இந்த இறால் பண்ணையில் ஒடிசா மாநிலம் ராயகுடா மாவட்டம் கொய்லகானா என்ற ஊரைச் சேர்ந்த சோமநாத் கவுடா மகன் பங்கஜ்கவுடா (18) என்பவர் சக தொழிலாளர்களுடன் வேலை பார்த்து வந்தார்.

பங்கஜ்கவுடாவிற்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறுகிறது. இந்த நோயால் அவதிப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் அவர் பணியாற்றிய இறால் பண்ணையில் விஷம் தின்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இறால் பண்ணை உரிமையாளர் பயமறியானேந்தலைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: