அளக்கரை கிராமத்தில் உலக மண் தின விழா

ஊட்டி, டிச. 7:  குன்னூர்   வட்டார தோட்டக்கலைத்துறையின் மூலமாக அளக்கரை கிராமத்தில் உலக மண் தின  விழா  நடந்தது. தோட்டக்கலை அலுவலர் கவின்யா தலைமை வகித்து மண் வளத்தின்   முக்கியத்துவம் குறித்தும், மண் மாதிரி சேகரிக்கும் முறை மற்றும் இயற்கை   வேளாண்மையை பின்பற்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கி   பேசினார். மேலும் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. தோட்டக்கலை   துறை சார்ந்த திட்டங்களான நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை   வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற மானிய திட்டங்கள்   குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் இளமாறன் விளக்கி பேசினார். இதில்  ஏராளமான  விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: