எஸ்பி தலைமையில் 700 போலீசார் பாதுகாப்பு வேலூர் மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தில்

வேலூர், டிச.7: வேலூர் மாவட்டத்தில் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் 700 போலீசார் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியான இன்று நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், அரசு கட்டிடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி, ஏஎஸ்பி மற்றும் 7 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மாலை வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, குடியாத்தம் உட்பட ரயில் நிலையங்கள், வேலூர் கோட்டை, மார்க்கெட் பகுதிகளிலும், புரம் பொற்கோயில் உட்பட முக்கிய கோயில்கள், மசூதிகள் உட்பட வழிபாட்டு தலங்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும் போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காட்பாடி, கன்டோன்மென்ட், குடியாத்தம் ரயில் நிலையங்களில் மெட்டர் டிடெக்டர் உதவியுடன் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்லவும், வெளியேறவும் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் தமிழக-ஆந்திர எல்லை சோதனை சாவடிகளிலும் பஸ்கள், கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டன.

Related Stories: