உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

ேகாவை, டிச.6: கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கணபதி பகுதி 30-வது வட்டத்தில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு, தி ஐ பவுண்டேஷன் உடன் இணைந்து, இலவச கண் சிகிச்சை, சிறப்பு மருத்துவர்களால் பல் ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகிய இலவச பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு கணபதி பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் தலைமை தாங்கினார். கணபதி பகுதி பொறுப்பாளர் கோவை லோகு முன்னிலை வகித்தார். முகாமை, கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்கிற கிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் கந்தசாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், உமாகாந்தன், வட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரன், கணபதி பொறுப்பு குழு உறுப்பினர்கள் கணபதி முருகேசன், செந்தில் பிரகாஷ், மாணவரணி தர்மா, இளைஞரணி ஜெகதீஷ், விவசாய அணி ரவி, இலக்கிய அணி சேரன், மாணவரணி ஸ்டீபன், சுபாஷ், ராஜன், நட்ராஜ், வட்ட பிரதிநிதி தணிகைவேல், கண்ணையன், காமராஜ், சதீஷ், சசி, மணி, ஈஸ்வரன், செல்வம், கார்த்திக், மாதேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More