வேலூர் மாநகராட்சியில் காலிமனைகளில் தேங்கிய மழைநீரில் லார்வா கொசு புழுக்களை ஒழிக்க எண்ணெய் பந்துக்கள் வீச்சு

வேலூர், டிச.5:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் கனமழை ெபய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்தது. அதேபோல், வேலூர் மாநகராட்சி பகுதிகளிலும் தொடர்மழைகாரணமாக காலிமனைகளில் மழைநீர் ேதங்கி நிற்கிறது. இந்த மழைநீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே காலிமனைகளில் தேங்கியுள்ள மழைநீரில் லார்வா கொசுப்புழுக்கள் உற்பத்தியை ஒழிக்கும் வகையில் மரத்தூர் கலந்த எண்ணெய் பந்துகளை போடும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் எண்ணெய் பந்துகள் போடும்பணி நடந்து வருகிறது.

அதன்படி வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில், சத்துவாச்சாரி ராம் நகர், நேதாஜி நகர் உள்பட 2வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மரத்தூள் கலந்த எண்ணெய் பந்துகள் போடும் பணி நேற்று நடந்தது. வீடுகள் மற்றும் கால்வாயில் தண்ணீர் தேங்கி இருந்ததால், பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பயன்படுத்தப்பட்ட தேவையற்ற சமையல் எண்ணெய்யை ஊற்றினால் கொசு புழுக்கள் அழிந்துவிடும். எனவே கொசுக்களை ஒழிக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: