ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிறுமியின் வாய்பிளவு அறுவை சிகிச்சைக்கு உதவிய அரசு டாக்டர்

ராணிப்பேட்டை, டிச.5: ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிறுமியின் வாய்பிளவு அறுவை சிகிச்சைக்கு அரசு டாக்டர் உதவி செய்துள்ளார். ராணிப்பேட்ைட மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்தவர் இளம்பெண் நிஷாந்தி, கைகுழந்ைதயுடன் காவேரிப்பாக்கத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் அரசு டாக்டர் ரவிசங்கர், காவேரிப்பாக்கத்திற்கு சென்று நிஷாந்தி மற்றும் அவரது குழந்தையை மீட்டு வேலூர் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து பிரிந்திருந்த நிஷாந்தினியின் கணவர், தனது மனைவி காப்பகத்தில் இருப்பதை அறிந்து, வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே வாய்பிளவினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உதவினார். வாய்பிளவு அறுகை சிகிச்ைச குறித்து ேவலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் செல்வியிடம் கேட்டபோது, ‘வேலூர் அரசு மருத்துவமனையிலும், வாய்பிளவு அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

Related Stories:

More