நாகை மாவட்டத்தில் நகர்புற வாழ்விட திட்டத்தின் கீழ் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

நாகை,டிச.5: நகர்புற வாழ்விட திட்டத்தின் கீழ் வீடுகள் பெற நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடலூர் கோட்டம் மூலம் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் நாகை மாவட்டம் சம்பாதோட்டத்தில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு நீர்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்களை மறு குடியமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். நகர்புற வீடற்ற ஏழைகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வீடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு தொகை போக மீதம் உள்ள ரூ.1.20 லட்சத்தை பயனாளிகள் பங்குத்தொகையாக வழங்க வேண்டும்.

தகுதியானவர்கள் தங்கள் பெயரிலோ, குடும்ப உறப்பினர்கள் பெயரிலோ வேறெங்கும் வீடுகள் இல்லை எனவும், மாத வருவாய் ரூ.25 ஆயிரத்திற்குள் தான் எனவும் சான்றழிக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் நிர்வாகப்பொறியாளர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கடலூர் கோட்ட அலுவலகம், ஆற்றங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது நாகை மாவட்டம் நாகூர் நகரம், சம்பாதோட்டம் திட்டப்பகுதியில் நேரடியாக உதவிப்பொறியாளர் செல்போன் எண்: 8838877874 மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள் செல்போன் எண்கள்: 8610671056, 9443672920 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More