பழங்குடியின மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

பொள்ளாச்சி,டிச.5: பொள்ளாச்சி பிரின்ஸ் அரிமா சங்கம் சார்பில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப்பில் உள்ள மலைவாழ் மக்கள் பள்ளிக்கு தேவையான உதவிகள் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கும் விடுதிக்கு தேவையான போர்வை, தலையனை, படுக்கை விரிப்புகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் வரவேற்றார். சங்க முன்னாள் ஆளுனர் தர்மராஜ் கலந்து கொண்டு  பொருட்களை வழங்கி  துவக்கி வைத்தார்.சங்க நிர்வாகிகள் இளங்கேவன், ரகுவரன், பள்ளி  ஆசிரியை வனஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், டாப்சிலிப்பில் நூலகம் அமைக்கும் பணியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் கமலகண்ணன், மோகன்குமார் ஏற்பாடு செய்தனர். அந்த நூலகத்துக்கு ரூ.53ஆயிரத்து 600 மதிப்பிலான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: