அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனையில் கோவை தொழிற்சங்க ரோட்டரி கிளப் சார்பில் இலவச டயாலிசிஸ் மையம்

ஈரோடு, டிச.5: அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனையில், கோவை தெழிற்சங்க ரோட்டரி கிளப் சார்பில் இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன், துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் பூர்ணிமா் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு நிர்வாகி சுகுமார், லோட்டஸ் மருத்துவமனை சேர்மன் சகாதேவன், ரேட்டரி கிளப் முன்னாள் மாவட்ட ஆளுனர் ஜோஸ் சேக்கோ, மாவட்ட ஆளுனர் சுந்தரவடிவேல், மாவட்ட நிறுவனர் ஜெயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தனர். விழாவில் ரோட்டரி கிளப் ஈரோடு மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார், சமூகசேவை பிரிவு தலைவர் உமாபிரபு, செயலாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இது குறித்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ரோட்டரி சங்கம் 126 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு  வருகிறது. இதில் டயாலிசிஸ் சேவையும் ஒன்று. இந்த டயாலிசிஸ் சேவை மையத்தை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கிராமப்புற மக்களுக்கும் இந்த சேவை சென்றடையும் என நம்புகிறோம். ஒரு முறை டயாலிசிஸ் செய்ய ரூ.1,000-ம் வரை கிராம மக்கள் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம்’’ என்றனர்.

Related Stories: