சத்தியமங்கலம்,மார்ச் 3: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா,கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று (3ம் தேதி)சந்திர கிரகணம் உள்ளதால் கோயில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3:20 மணி முதல் 6.48 வரை சந்திர கிரகணம் நிலவுவதால் மதியம் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் எனவும், கிரகணம் முடிந்தவுடன் கோயில் சுத்தம் செய்யப்பட்டு நாளை (4ம் தேதி)அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
