காரியாபட்டியில் கட்டுமானப்பொருள் விலை உயர்வை கண்டித்து மறியல்

காரியாபட்டி, டிச. 3: கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மறியல் காரியாபட்டியில் நடைபெற்றது. கட்டுமானப்பொருட்களான மணல், சிமெண்ட், கம்பி, பெயிண்ட், ஜல்லி போன்ற பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மணல் குவாரிகளை அதிகப்படுத்திடவும், தரமான எம்.சாண்ட் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. காரியாபட்டி பஸ்நிலையம் முன்பு நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், மாவட்ட பொருளாளர் பரமசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர்.மறியலில் ஈடுபட்ட 100 பேரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More