திருவண்ணாமலை அருகே ஏரி காவலாளியை தாக்கிய 4 பேர் கைது

திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலை அருகே ஏரிக்கு காவல் இருந்த காவலாளியை தாக்கிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தோமிக்(49), அதே பகுதியில் உள்ள ஏரியை, இவரது உறவினர் குகன் என்பவர் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஏலம் எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இந்த ஏரிக்கு காவலாக ேதாமிக் மாத ஊதியத்திற்கு பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி ஏரியில், வானியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிலர் திருட்டு தனமாக மீன் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரிடமிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன் வாங்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஏரிக்கு காவலாக இருந்த தோமிக் சொல்லிதான் செல்போன் வாங்கி சென்றதாக கருதி, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் காவலாளியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தோமிக் திருவண்ணாமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இது குறித்து நேற்று திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வானியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(25), அஜித்(23), அஜித்குமார்(25), முல்லைவேந்தன்(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணி, கோபி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: