மழையால் வாழைகள் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை

தொண்டி,டிச.1:  முகிழ்த்தகம் கிராமத்தில் மழையால் வாழை தோட்டம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமம் மற்றும் சுற்று வட்டாரத்தில் வாழை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு போல் வாழைக்கு காப்பீடு இப்பகுதியில் வழங்கப்படாததால் ஒவ்வொரு வருடரும் நஷ்டத்தையே விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்ததால் வாழை தோட்டம் முழுவதும் தண்ணீர் தேங்கி வாழை மரங்கள் சாய்ந்து விழ துவங்கி விட்டது.

தண்ணீரை வெளியேற்றிய பின்னர் மீண்டும் மழை பெய்து, பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இப்பகுதி விவசாயிகள் மோட்டார் மூலம் வாழை தோட்டத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது இறித்து விவசாயி பிரபு கூறியது, ஒவ்வொரு வருடமும் தண்ணீர் தேங்கி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. நெல் பயிற்கு போல் வாழைக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: