திருவில்லிபுத்தூர் தொகுதியில் 30 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி தகவல்

திருவில்லிபுத்தூர், மார்ச் 24: திருவில்லிபுத்தூர் தொகுதியில் 30 வாக்குசாவடிகள் பதற்றமானவை எனவும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் ஆபத்தானவை எனவும், தேர்தல் அதிகாரி முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் 30 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. இதன்படி, டிஇஎல்சி மிடில் ஸ்கூல் ராமசாமியாபுரம் பள்ளியில் உள்ள 2 வாக்குசாவடிகள். கூமாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இரண்டு வாக்குசாவடிகள், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி கோட்டையூர் பகுதி இரண்டு வாக்குச்சாவடிகள், ஆர்.சி நடுநிலைப்பள்ளி வ.புதுப்பட்டியில் உள்ள இரண்டு வாக்குசாவடிகள், திருவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வாக்குசாவடிகள் உள்ளிட்ட 30 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. மேலும், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் உள்ள அருளப்பர் பிரைமரி ஸ்கூல் பள்ளி கிரிஸ்டியன் பேட்டை வாக்குச்சாவடி, திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் வசித்து வரும் உண்டு உறைவிட பள்ளி வாக்குச்சாவடி ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகள் ஆபத்தானவை. பதற்றமான மற்றும் ஆபத்தான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார், அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த பகுதியில் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>