சான்று இருந்தால் மட்டுமே அனுமதி

பெங்களூரு,  ஏப்.23:  கர்நாடகா உள்துறை அமைச்சர்  பசவாஜ் பொம்மை பெங்களூருவில்நேற்று அளித்த பேட்டி வருமாறு:  ஊரடங்கின் போது முன்கூட்டியே கடைகள் அடைத்து மக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க ேவண்டும். திங்கட்கிழமை காலை 6 மணி வரை யாரும் தேவையில்லாமல்  வீதிகளில் நடமாட கூடாது. அண்டை மாநிலங்களான மகராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில்  இருந்து வருபவர்களை தடுப்பு கேட்டுகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.  அவர்களிடம் கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். என்ன காரணத்திற்காக  வருகிறார்கள். எங்கு செல்கிறார்கள் என்ற  விவரங்களை  கேட்டறிய வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லை என்றால், விதிமுறையை மீறினால் அந்த வாகனங்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து  நிறுத்தி திருப்பி அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>