ராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்

ராசிபுரம், ஏப்.23:ராசிபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் பகுதியில், தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. புதிய பஸ் நிலையம் அருகில் உழவர் சந்தை மற்றும் செவ்வாய் சந்தை ஆகியவை இயங்கி வந்தது. இந்த சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் செயல்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட், அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், புதிய பஸ் நிலையம் அருகில் செயல்பட்ட உழவர் சந்தை மற்றும் செவ்வாய் சந்தை ஆகியவை, சேந்தமங்கலம் சாலை பிரிவு பகுதியில் உள்ள மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் சமூக இடைவெளியுடன் கடைகள் வைக்கவும், பொதுமக்கள் வந்துசெல்ல ஏதுவாக இடம் வழங்கி, நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று, நகராட்சி பொறியாளர் குணசீலன், சுகாதார அலுவலர் பாலகுமார் ராஜூ மற்றும் சுகாதார ஆய்வாளர்களுடன் சென்று இந்த தற்காலிக சந்தைகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories:

>