தென்காசி, கடையநல்லூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி, ஏப்.23:  தென்காசியில் மாவட்ட வக்கீல்கள் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வக்கீல்கள், காவல் நிலையம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வக்கீல்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு காணொலி வாயிலாக மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ எம்பி தேர்தல் வாக்கு எண்ணும் இடத்தில் முகவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பாக உரையாற்றினார்.  தென்காசியில் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை, சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் வக்கீல் ராஜா மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள்  மற்றும் பூத் முகவர்கள் பங்கேற்றனர்.கடையநல்லூர்: கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர்கள், வக்கீல்கள் பங்கேற்ற கூட்டத்தில் வீடியோ கான்பரசில் என்.ஆர்.இளங்கோ எம்பி உரையாற்றினார்.தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். வேட்பாளர்கள் முஹம்மது அபூபக்கர், சதன் திருமலைக்குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, சேக்தாவூது, மாடசாமி, சுந்தரமகாலிங்கம், பேபி, நல்லசிவன், விவேகானந்தன், முத்தையா, ஒன்றிய செயலாளர்கள் ராமையா, ரவிசங்கர், பொன் முத்தையாபாண்டியன், லாலா சங்கரபாண்டியன், பூசை பாண்டியன், வெள்ளைத்துரை, நகர செயலாளர்கள் சேகனா, ரஹீம், ராஜகாந்த், பேரூர் செயலாளர்கள் கோபால், ராஜராஜன், தங்கப்பா, குருசாமி, சரவணகுமார், வெள்ளத்துரை, சிதம்பரம், டாக்டர் செண்பகவிநாயகம், அணி அமைப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, வக்கீல் வெங்கடேசன், மருதப்பன், முதன்மை தேர்தல் முகவர் வக்கீல் செந்தூர்பாண்டியன், துணை அமைப்பாளர்கள் முத்துவேல், ஹக்கீம், மாரிக்குட்டி, வன்னியராஜா, பேச்சிபாகு, பொன்ராஜ், தமிழ்ச்செல்வி, உமாமகேஸ்வரி, பிச்சையா, கருப்பண்ணன், முகம்மது அலி, இன்பராஜ், மாநில பேச்சாளர் இஸ்மாயில், முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், கடாபி, வக்கீல்கள் செந்தில்குமார், ராமராஜ், பேட்ரிக்பாபு, சதீஷ்குமார் முத்துவேல், ராஜ்குமார், பாக்கியராஜ், முத்தையா, ஷர்புதீன், கம்யூனிஸ்ட் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>