250 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை வார்டு தயார் வட்டார மருத்துவ அலுவலர் தகவல் குடியாத்தம் தனியார் கல்லூரியில்

குடியாத்தம், ஏப்.23: குடியாத்தம் தனியார் கல்லூரியில் 250 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் அரசு மருத்துவமனை, நடுப்பேட்டை மற்றும் சந்தப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரோட்டரி சங்கம், தனியார் மருத்துவமனை மற்றும் கல்லப்பாடி, பரதராமி, அக்ராவரம், கூடல் நகரம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த முகாம்களில் இதுவரை 16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியாத்தம் அடுத்த குருராகவேந்திரா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் கமல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>